Categories: இந்தியா

மேகதாது அணை:கர்நாடக நீர்பாசன அமைச்சர் அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு …!

Published by
Venu

கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது அணை கட்டுவது தொடர்பான ஆய்வை தொடங்கியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது. இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது அணை தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க தங்களை சந்திக்க நேரம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை.கர்நாடகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதன் பின் மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறுகையில்,மேகதாது அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அதேபோல் இன்று  முதல் அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் அதேபோல் இன்று கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது அணை கட்டுவது தொடர்பான ஆய்வை தொடங்கியுள்ளார்.காவிரி ஆற்றில் மேகதாது என்ற இடத்தில் வல்லுநர் குழுவுடன்  கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆய்வு செய்து வருகிறார்.கர்நாடக அரசு தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளது .

Published by
Venu

Recent Posts

இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்… உருமாறியது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்… உருமாறியது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…

8 minutes ago

75வது அரசியல் சாசன தினம்! ஒரே மேடையில் திரௌபதி முர்மு, மோடி, ராகுல் காந்தி, கார்கே…

டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…

23 minutes ago

மீண்டும் வெற்றி விழா? விரைவில் ‘அமரன்’ கொண்டட்டம்! கமலின் பிரம்மாண்ட திட்டம்!

சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால்,  சிவகார்த்திகேயன்…

29 minutes ago

மகாராஷ்டிரா புதிய முதலமைச்சர் யார்? ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே!

மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…

1 hour ago

சென்னையில் நாளை முதல் மழை சூடு பிடிக்கும் – வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவு!

சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…

2 hours ago

இரண்டாம் நாளாக சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம்.!

 சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…

2 hours ago