மேகதாது அணை :திட்ட அறிக்கை தயாரிக்க தடைவிதிக்க முடியாது..!உச்சநீதிமன்றம்

Published by
Venu

மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடைவிதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் சுமார் 5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு சாத்திய கூறு இருப்பதாக தனது அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தது.ஆனால் இதனை தமிழக அரசு எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம் ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக  மாநில நீர்ப்பாசனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து மட்டுமல்லாமல் தமிழக சட்டமன்றத்தை கூட்டி இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்ற உள்ள நிலையில் அனுமதி வழங்கிய மத்திய அரசு மற்றும் திட்டத்தில் உறுதியாக உள்ள கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்தது. இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே தாக்கல் செய்துள்ளார்.

வழக்கில் மத்திய நீர்வள ஆணைய திட்ட அனுமதி இயக்குநராக இருக்கும் என். முகர்ஜி மற்றும் மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன் கர்நாடக மாநில காவிரி நீராவாரி நிகாம் நிறுவன நிர்வாக இயக்குநர் மல்லிகார்ஜூன் பி குகே மற்றும் கர்நாடக மாநில நீர்பாசனத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் மற்றும் அம்மாநிலத்தின் நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் ஆகியோர் மீது மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கானது கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இருமாநில காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம் தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டு குறிப்பிடப்படும் 5 பேரையும் நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் மற்றும் கர்நாட அரசிற்கு  அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நீதிமன்ற அவமதிப்பு செயல்களில் கர்நாடகவோ , மத்திய அரசோ தலையீடாமல் இருக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு தனது மனுவில் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று விசாரித்தது உச்சநீதிமன்றம்.அதில் மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடைவிதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது உச்சஅநீதிமன்றம்.

Published by
Venu

Recent Posts

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

12 minutes ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

21 minutes ago

ரபாடா 10.75 கோடி..பட்லர் 15.75 கோடி…திமிங்கலங்களை தூக்கிய குஜராத் அணி!!

ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…

31 minutes ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாறை எழுதினார் ‘ஷ்ரேயஸ் ஐயர்’! ரூ.26.75 கோடிக்கு வாங்கிய பஞ்சாப்!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…

55 minutes ago

போட்டி போட்ட அணிகள்.. 18 கோடிக்கு தக்க வைத்த பஞ்சாப்! முதல் வீரராக ஏலம் சென்றார் ஹர்ஷதீப் சிங்!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…

1 hour ago

இனிமே இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாது! மாயாவதி அறிவிப்பு!

சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…

1 hour ago