தமிழக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக பேசினார்.
இந்நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதமாக உள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, மேகதாது அணை கட்டப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…