மோடியுடன் சந்திப்பு.! சிஏஏ பற்றி பயப்படத் தேவையில்லை- உத்தவ் தாக்கரே.!

- மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
- சந்திப்பிற்கு பிறகு பேசி உத்தவ் தாக்கரே குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து கவலைப்பட தேவையில்லை எனவும் கூறினார்.
தற்போது நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக பல இடங்களில் பேரணி நடந்து வருகிறது. சமீபத்தில் மோடி “எவ்வளவு நெருக்கடி வந்தாலும் குடியுரிமை சட்டத் திருத்தம் செயல்படுத்தப்படும்” என கூறினார்
இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு பேசி உத்தவ் தாக்கரே “தேசிய குடிமக்கள் பதிவு மூலம் மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவை இருக்காது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து கவலைப்பட தேவையில்லை எனவும் கூறினார்.
கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலுக்குப் பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனா பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொண்டு பின்னர் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றுக்கொண்டார்.
பாஜகவுடன் சிவசேனா கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு மோடியை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசி இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025
ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025