நதிக்கரையோரம் இரவில் தனது வருங்கால கணவரை சந்திக்க சென்ற பொழுது, மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செவிலியர்.
ஆந்திராவில் விஜயவாடா பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவரோடு திருமணம் நிச்சயித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதியன்று தனது வருங்கால கணவரை இரவில் கிருஷ்ணா நதிக்கரையோரம் சந்திக்க சென்றுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், மர்ம கும்பல் இவர்களை தாக்கியுள்ளது.
வருங்கால கணவரை பயங்கரமாக தாக்கி அங்கே கட்டி போட்டுள்ளனர். பின்னர், செவிலியரை அந்த மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரவு நேரம் என்பதால் செவிலியர் உதவிக்கு அழைத்தும் உதவ யாரும் வரவில்லை. பின்னர் இந்த மர்ம கும்பல் படகின் மூலம் ஆற்றில் சென்று தப்பித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தாயார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை குண்டூரில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் குண்டூர் போலீசார் உள்ளூரில் இருக்கும் குற்றவாளிகள் ஈடுபட்டிருப்பதாக சந்தேகித்துள்ளனர். மேலும், இந்த வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பொருட்டு வலைவீசி போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…