வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் ! விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,டெல்லியில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் 10-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை.விவசாய சங்கங்கள் தீவிரமாக ஆலோசனை பெற்று வந்த நிலையில்,வரும் 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த டெல்லியில் விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.ஆகவே நாடு தழுவிய போராட்டத்திற்கு முடிவு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி கொண்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் விக்யான் பவனில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கற்றுள்ளனர்.மத்திய அரசு சார்பில்,மத்திய வேளாண்த் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ,மத்திய ரயில்வே மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.