போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளது மத்திய அரசு.
வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.
இதையடுத்து அண்மையில் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய அமைப்புகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் ,பியூஸ் கோயல் பங்கேற்றுள்ளனர்.