9 கின்னஸ் சாதனை படைத்த கம்பியூட்டர் ஊழியர்..!டைப்பிங்கில் பலவிதம்..!
டைப்பிங்கில் பல கின்னஸ் சாதனையை படைத்த டெல்லியை சேர்ந்த கம்பியூட்டர் ஊழியர்.
டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் ஊழியராக பணிபுரிபவர் வினோத் குமார் சவுத்ரி. இவருடைய வயது 41. இவர் கம்பியூட்டரில் அதிவேகமாக தட்டச்சு செய்து 8 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். மேலும் விளையாட்டில் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
9 சாதனையை அசால்ட்டாக முடித்த வினோத்குமார் சவுத்ரி இது குறித்து தெரிவித்துள்ளதாவது, எனக்கு விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், உடல்நிலை பாதிப்பால் அதில் சாதிக்க முடியவில்லை. அதன் காரணத்தால் டைப்பிங்கில் வேகமாக தட்டச்சு செய்து பல சாதனைகளை புரிந்துள்ளார். கடந்த 2014 இல் மூக்கில் வேகமாக தட்டச்சு செய்து சாதனை படைத்தார். பின்னர் கண்களை மூடிக்கொண்டு தட்டச்சு செய்துள்ளார். அடுத்து 2017 ஆம் ஆண்டு வாயில் குச்சி வைத்து தட்டச்சு செய்துள்ளார்.
இதனை அடுத்து அவரது கின்னஸ் சாதனையை அவரே முறியடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், இவர் விளையாட்டில் டென்னிஸ் பந்தை ஒரு நிமிடத்தில் கைகளால் 205 முறை தொட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் இவருக்கு சச்சின் போல் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை சச்சின் 19 உலக சாதனை புரிந்துள்ளார். இதனை முறியடிப்பது தான் இவருடைய இலக்கு என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.