போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளும் மீனாட்சி லேகி..!
வெளியுறவுத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி நாளை முதல் ஆறு நாள் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மீனாட்சி லேகி நாளை முதல் 14 வரை போர்ச்சுகலில் இருப்பார். அங்கு அவர் போர்த்துகீசிய பிரதிநிதி பிரான்சிஸ்கோ ஆண்ட்ரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பயணத்தின் போது போர்ச்சுகலில் பணிபுரியும் இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான இருதரப்பு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படும் என்று கூறப்படுகிறது.
மீனாட்சி லேகி போர்ச்சுகலின் வெளியுறவு அமைச்சர் அகஸ்டோ சாண்டோஸ் சில்வா, கலாச்சார அமைச்சர் கிராகா மரியாடா பொன்சேகா மற்றும் போர்ச்சுகீஸ் மொழி நாடுகளின் (சிபிஎல்பி) நிர்வாகச் செயலாளர் சக்கரியாஸ் டி கோஸ்டா ஆகியோரை சந்திக்க உள்ளார்.
பின்னர், மீனாட்சி லேகி செப்டம்பர் 15 முதல் 17 வரை ஸ்பெயினுக்கு பயணம் செய்யும் போது, வெளியுறவுத் துறை அமைச்சர் ஏஞ்சல்ஸ் மோரேனோ பாவ் மற்றும் ஸ்பானிஷ் அரசாங்கத்தின் மற்ற மூத்த அதிகாரிங்களை சந்திக்கவுள்ளார்.