[file image]
MEFTAL (மெஃப்டல்) என்ற வலி நிவாரணி மாத்திரை பயன்பாடு குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) எச்சரிக்கை விடுத்துள்ளது. மெஃப்டல் என்பது பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி ஆகும். இது மாதவிடாய் வலி, மூட்டுவலி, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு விரைவான நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மெஃப்டல் என்ற வலி நிவாரணி மாத்திரை பயன்பாடுக்கு எதிராக இந்திய மருந்தியல் ஆணையம் (ஐபிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது. மாதவிடாய் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் MEFTAL என்ற வலி நிவாரணி மாத்திரை மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தேர்தல் வெற்றி.! மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.! அமைச்சரவையில் திடீர் மாற்றம்.!
அதாவது, ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் (Eosinophils) உருவாக வாய்ப்பு உள்ளது. தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் MEFTAL என்ற வலி நிவாரணி மாத்திரை உட்கொண்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின் தோன்ற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவர்கள் அறிவுறுத்தல் இன்றி வலி வரும்போதெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான இந்திய மருந்தியல் ஆணையம் (IPC), இந்தியாவில் மருந்துகளுக்கான தரநிலைகளை அமைக்கிறது. இந்த சூழலில் வலி நிவாரணி மாத்திரை மெஃப்டல் தொடர்பான மோசமான விளைவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மருந்துப் பொருட்களுடன் தொடர்புடைய பாதகமான மருந்து எதிர்வினைகள் (ADRs) மற்றும் பாதகமான நிகழ்வுகள் பற்றிய தகவல்களைக் கண்காணித்து சேகரிக்கும் இந்திய பார்மகோவிஜிலன்ஸ் திட்டம் (PvPI), தனது முதற்கட்ட ஆய்வில், மெஃப்டல் மருந்து மெஃபெனாமிக் அமிலம் ஈசினோபிலியா மற்றும் அமைப்பு ரீதியான அறிகுறிகளுடன் மருந்து எதிர்வினைகளைத் தூண்டுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…