MEFTAL வலி நிவாரணி மாத்திரையை பயன்படுத்தாதீங்க.. இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை!

MEFTAL

MEFTAL (மெஃப்டல்) என்ற வலி நிவாரணி மாத்திரை பயன்பாடு குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) எச்சரிக்கை விடுத்துள்ளது. மெஃப்டல் என்பது பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி ஆகும். இது மாதவிடாய் வலி, மூட்டுவலி, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு விரைவான நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மெஃப்டல் என்ற வலி நிவாரணி மாத்திரை பயன்பாடுக்கு எதிராக இந்திய மருந்தியல் ஆணையம் (ஐபிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாதவிடாய் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் MEFTAL என்ற வலி நிவாரணி மாத்திரை மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தேர்தல் வெற்றி.! மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.! அமைச்சரவையில் திடீர் மாற்றம்.!

அதாவது, ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் (Eosinophils) உருவாக வாய்ப்பு உள்ளது. தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் MEFTAL என்ற வலி நிவாரணி மாத்திரை உட்கொண்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின் தோன்ற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவர்கள் அறிவுறுத்தல் இன்றி வலி வரும்போதெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான இந்திய மருந்தியல் ஆணையம் (IPC), இந்தியாவில் மருந்துகளுக்கான தரநிலைகளை அமைக்கிறது. இந்த சூழலில் வலி நிவாரணி மாத்திரை மெஃப்டல் தொடர்பான மோசமான விளைவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மருந்துப் பொருட்களுடன் தொடர்புடைய பாதகமான மருந்து எதிர்வினைகள் (ADRs) மற்றும் பாதகமான நிகழ்வுகள் பற்றிய தகவல்களைக் கண்காணித்து சேகரிக்கும் இந்திய பார்மகோவிஜிலன்ஸ் திட்டம் (PvPI), தனது முதற்கட்ட ஆய்வில், மெஃப்டல் மருந்து மெஃபெனாமிக் அமிலம் ஈசினோபிலியா மற்றும் அமைப்பு ரீதியான அறிகுறிகளுடன் மருந்து எதிர்வினைகளைத் தூண்டுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்