பகலில் மருத்துவ பணி, இரவில் சாலை ஓரம் தூங்கிய மருத்துவர்
மருத்துவர் ஒருவர் பகலில் மருத்துவமனையில் பணி முடித்து விட்டு இரவில் சாலை ஓரமாக காரிலேயே தூங்கியுள்ளார்.
சச்சின் நாயக் என்பவர் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக இருந்து வருகிறார்.போபால் நகரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.எனவே மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் சச்சின் நாயக், இரவில் வீட்டிற்கு செல்வது இல்லை.
அதற்கு மாறாக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையை படுக்கை போல் சாய்த்து, அதிலே உறங்கிவிடுகிறார். இதன் காரணமாக காரில் லேப்டாப்,பிரஷ்,சோப்பு ,தண்ணீர்,பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளார். இவர் காரிலே தங்கிருப்பதற்கு முக்கிய காரணம தன்மூலம் கொரோனா மனைவிக்கோ, மகளுக்கோ வேறு யாருக்கும் பரவி விடக்கூடாது என்பதற்காகத்தான்.இதற்கு இடையில் தான் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டாக்டர்கள் ஹோட்டல்களில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த மருத்துவரின் சேவையை அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பாராட்டியுள்ளார்.