உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிக்க அனுமதி இல்லை… மத்திய அரசு அதிரடி.!
உக்ரைனில் இருந்து இந்தியா வந்த மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிக்க அனுமதி இல்லை என மத்திய அரசு பதில் கூறியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையே போர் மூண்ட போது, உக்ரன் நாட்டில் பயின்று வந்த வெளிநாட்டு மாணவர்கள் அவராவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதில் பெரும்பாலான எண்ணிக்கையில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களது படிப்பை பாதியில் விட்டு விட்டு இந்தியா வந்தார்கள்.
அவர்களுக்கு இங்கு இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிக்க இடம் கொடுத்திருகிறார்களா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது.
அதற்கு மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து இந்தியா வந்த மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிக்க அனுமதி இல்லை என திட்டவட்டமாக பதில் கூறியுள்ளது. இங்கு நீட் தேர்வு மூலமாக மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.