மத்திய பிரதேசத்தில் பாலத்தின் மீது செல்ஃபி எடுக்க முயன்ற மருத்துவ மாணவி உயிரிழந்துள்ளார்.
மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில் சிலிக்கான் நகரை சேர்ந்தவர் நேகா அர்ஸ். இவர் சாகர் மருத்துவக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் எம்.பி.பி.எஸ். மாணவி. இவர் இந்தூரில் உள்ள பாலத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இந்தூர் ராஜேந்திர நகர் காவல் நிலையத்தின் அருகில் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து ராஜேந்திர நகர் காவல் நிலையம் தெரிவித்துள்ளதாவது: நேகா மற்றும் அவரது சகோதரர் தினமும் இந்த பாலத்தின் வழியாக நடந்து செல்வது வழக்கம். விபத்து நடந்த அன்று அங்கு பலத்த மழை பெய்துள்ளது. மேலும், சகோதரர் அருகில் இருக்கும் கடையில் சிப்ஸ் வாங்க சென்றுள்ளார். அப்போது நேகா பாலத்தில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். சுயக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தண்டவாளத்தின் மீது பல அடிகளை எடுத்து வைத்து கீழே விழுந்துள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த நேகாவை அருகில் இருக்கும், சோயித்ரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருந்தபோதிலும் இவரை காப்பாற்ற முடியவில்லை, என்று தெரிவித்துள்ளது. மேலும் ராஜேந்திர நகர் சப் இன்ஸ்பெக்ட்டர் அமர்சிங் பிஜ்வா கூறுகையில், இந்த மருத்துவ மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த விசாரணை மற்றும் நேரடியாக பார்த்த சாட்சிகளின் அடிப்படையில் இது விபத்து என்று தோன்றுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…