இதன் மூலம் தலைமுறை நோய்கள் மற்றும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி உதவி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்தியது. ஆனால், மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் அரசு எவ்வளவு நிதி உதவி வழங்குவது என்பது தொடர்பாக மாநில மற்றும் மத்திய அரசுகளூக்கு இடையே சில குழப்பங்கள் நிலவியதால், இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதில் சிக்கல் நிலவியது. இதன் காரணமாக இதற்க்கு தீர்வு காண நிபுணர் குழு ஒன்றை அமைத்து அரிய நோய் சிகிச்சைகளுக்கான தேசிய கொள்கையை வடிவமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டது.
இதன்படி தயாரிக்கப்பட்ட தேசிய வரைவு கொள்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில், அரிய நோய் சிகிச்சைக்காக ஒருமுறை நிதி உதவியாக 15 லட்சம் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை அணுபவிக்கும் பயனாளிகளான, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமின்றி, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்ட பயனாளிகளில் 40 சதவீதம் பேர் தகுதி பெற்றவர்களாக இருப்பர் என்றும், இதற்கான சிகிச்சையை எய்ம்ஸ், மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி, சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் கல்லூரி போன்ற அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த சிறந்த வரைவு கொள்கையை மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்கள், நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவருக்காகவும் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி வரை தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் பரம்பரை நோயினால் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுக்கும் நோயாளிகளுக்கு சிறந்த வரப்பிரசாதமாக அமையும் என சமுக ஆர்வளர்கள் கருதுகின்றனர்.
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…