விமானம் மூலம் கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு வந்த மருத்துவ உபகரணங்கள்!
கொரோனா சிகிச்சைக்காக கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வந்து சேர்ந்ததுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் ஒருபுறமிருக்க, மருத்துவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்தியாவிற்கு மற்ற பிற நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பிற நாடுகள் இந்தியாவிற்கு உதவி வரும் நிலையில் தற்பொழுது கத்தார் நாட்டில் இருந்தும் மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான பொருட்கள் அனைத்தும் இன்று அதிகாலை விமானம் மூலமாக இந்தியாவை வந்தடைந்து உள்ளது. இதில் 4 ஆயிரத்து 300 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 40 வெண்டிலேட்டர் ஆகியவை வந்தடைந்துள்ளதாம். ஏற்கனவே இதற்கு முன்பதாக கத்தாரில் இருந்து கப்பல் மூலம் 40 டன் திரவ ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.