கொரோனாவால் அனைத்தையும் ஒதுக்கி வைத்த மருத்துவ தம்பதிகள்.!
டெல்லியில் கொரோனாவால் அனைத்தையும் ஒதுக்கி வைத்த மருத்துவ தம்பதிகளை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது, மேலும் மும்பை, டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த கொரோனா வைரஸிற்கு எதிராக நின்று போராடி வரும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது தான்.
இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த இரு மருத்துவ தம்பதிகள் மிஸ்ரா, ரோஹத்கி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் டெல்லி லோக் நாயக் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்கள், திருமணம் முடிந்ததும் இருவரும் தனியாக நேரம் செலவழிக்க வெளிநாட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர் ஆனால் கொரோனா வைரஸ் வந்ததால் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு ரஷ்மியும் இஷானும் மருத்துவ சேவையில் நேரம் காலம் பார்க்காமல் தங்களது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் தனது குடும்பங்களுடன் வீடியோ கால் மூலமாக மட்டுமே பேசி வருகிறார்கள். அனைவரும் பாதுகாப்பாக இருக்க கூறுகிறோம், மேலும் தங்களின் சொந்த விஷயங்கள் அனைத்தும் ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றும் இந்த தம்பதியரைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.