பூஸ்டர் டோஸ் செலுத்த மருத்துவச் சான்றிதழ் கட்டாயமில்லை – மத்திய அரசு
60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை உடையவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது, மேலும் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உடையவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள மருத்துவ சான்றிதழ் கட்டாயம் இல்லை என்றும், மருத்துவ ஆலோசனை பெற்று, வசதியுடையவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.