டெல்லியில் இன்று மேயர் தேர்தல்..! புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு..!
டெல்லியில் இன்று மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.
டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலை வந்த நிலையில், கருத்துக்கணிப்புகளும் ஆம் ஆத்மி கட்சி தான் வெற்றி பெறும் என தெரிவித்திருந்தது.
அதன்படி ஆம் ஆத்மி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது. கடந்த 7-ஆம் தேதி டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 134 இடங்களில் ஆம் ஆத்மீயும், 104 இடங்களில் பாஜகவும், 9 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் இன்று பதவியேற்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து, டெல்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. முதல் முறையாக டெல்லியில் மேயர் பதவிக்கு பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.