ஒருவேளை ஜிஎஸ்டி ரசிதுகளிலும் மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் போல – சீதாராம் யெச்சூரி
மக்களின் பணத்தை ஒருவரின் தொண்டாக குறிப்பிடுவது நியாயமானது அல்ல, அபத்தமானது என சீதாராம் யெச்சூரி ட்வீட்.
தெலங்கானா மாநிலத்தில் ரேஷன் கடை ஒன்றில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாததால் மாவட்ட ஆட்சியரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
இதுகுறித்து சீதாராம் யெச்சூரி அவர்கள், , ‘ஒருவேளை ஜிஎஸ்டி ரசிதுகளிலும் மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் போல; மக்களின் பணத்தை ஒருவரின் தொண்டாக குறிப்பிடுவது நியாயமானது அல்ல, அபத்தமானது. இங்கு எதுவும் இலவசம் இல்லை. இந்தியர்கள் அனைவரும் வரி செலுத்துகிறார்கள்’ பதிவிட்டுள்ளார்.
Perhaps Mr Modi’s photo should be printed on all GST bills too. It is untrue and absurd to term people’s money as one man’s charity. Nothing is free. All Indians pay taxes. #PeoplesMoney pic.twitter.com/Cq9r9t8rw9
— Sitaram Yechury (@SitaramYechury) September 3, 2022