மே – 4 முதல் தொழிற்சாலைகள் இயங்க முடிவு – முதல்வர் எடியூரப்பா
கர்நாடகாவில் அதிகம் தொற்று இல்லாத பகுதியில் மே 4 முதல் தொழிற்சாலைகள் இயங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் அதிகம் தொற்று இல்லாத பகுதியில் மே 4 முதல் தொழிற்சாலைகள் இயங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடகாவில் இதுவரை 535 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 216 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 21 பேர் இந்த தொற்றால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.