வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறை குறித்து உச்ச நீதிமன்றம் நாளை வழக்கினை ஒத்திவைத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே வங்கியில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் தவணையை தாமதமாக கட்டலாம் அறிவிக்கப்பட்டது. ஆனால் வங்கிக் கடன் தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது கடன் இ.எம்.ஐ செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
வங்கிக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளது மத்திய அரசு என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.மேலும் வங்கிக் கடன் தவணை வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு சுயமாக முடிவெடுக்க வேண்டும்.வணிக நலனில் மட்டும் அக்கறை செலுத்தக்கூடாது . உங்களது பொது முடக்க உத்தரவால் ஏற்பட்டது என்று கூறி ,வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையில் ,வங்கிக் கடன் தவணையை செலுத்த 2 ஆண்டுகள் வரைகூட அவகாசம் தர முடியும் என்று மத்திய அரசு சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.பின் இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தது.இந்நிலையில் இன்று முடிவு அறிவிக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நாளை ஒத்திவைப்பதாக அறிவித்தது உச்சநீதிமன்றம்.
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…