M.Phil , Ph.D மாணவிகளுக்கு பேறுகால விடுப்பு – யுஜிசி கடிதம்..!
மகப்பேறு விடுப்பு மற்றும் வருகைத் தளர்வுகளுக்கான விதிகளை உருவாக்க அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு யுஜிசி கடிதம்.
இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவிகளுக்கு வருகை தொடர்பான தளர்வுகளையும், மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான தகுந்த விதிமுறைகளையும் உருவாக்க அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
துணைவேந்தர்களுக்கு எழுதிய கடிதத்தில், UGC ஒழுங்குமுறைகள் 2016 இல் உள்ள விதிகளில் ஒன்றை மேற்கோள் காட்டி, அதில், ” M.Phil , Ph.D மாணவிகளுக்கு படிப்பு காலத்தின்போது மகப்பேறு விடுப்பு அல்லது குழந்தை பராமரிப்பு விடுப்பு 240 நாட்கள் வரை ஒருமுறை வழங்கப்படலாம்”. விடுப்பில் உள்ளவர்களுக்கு தேர்வு கால சலுகை, வருகை பதிவேட்டில் சலுகை தர விதி வகுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.