பல மணி நேரங்கள் முடங்கிய பிரபல செய்தி நிறுவனம்

Default Image

இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( Press Trust of India) -வின் சேவைகள் கடந்த சனிக்கிழமை முடங்கியுள்ளது.

ரன்சம்வர் அட்டாக்  ( ransomware attack) என்பது ஒரு நிறுவனத்தின் ” கணினியின் சர்வருக்குள்   ” (computer servers ) நுழைந்து அதன் சேவைகளை முடக்குவது ஆகும்.ஆன்லைன் திருடர்கள் இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவைகளை முடக்கி பிணைத் தொகை கேட்டு தொடர்புடைய நிறுவனத்தை மிரட்டுவார்கள்.

அந்தவகையில் தான் கடந்த சனிக்கிழமை இரவு இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( Press Trust of India) -வின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக இந்த நிறுவனத்தின் செய்தி பகிரும் சேவை பல மணி நேரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து தொழில்நுட்ப நிபுணர்கள் சனிக்கிழமை இரவு முழுவதும் போராடி ஞாயிற்றுக்கிழமை காலை தகவல்களை மீட்டு எடுத்துள்ளனர்.ஆனால் இதற்காக பிணைத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( Press Trust of India) நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்