முகக்கவசங்கள் கொரோனா பரவலை தடுக்கும் – மத்திய அரசு!
சீனாவில் உருவாகி இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இந்தியா என பல நாடுகளை குறிவைத்து வேகமாக தாக்கிக்கொண்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸ் தற்பொழுது மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்தியாவில் மட்டும் தாக்கி உள்ளது. இதனால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்பொழுது இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவும் தற்போது வரை அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகையில் முக கவசம் அணிய வேண்டும் மற்றும் வைரஸ் பெரிய அளவில் சமூகத்தில் பரவாமல் இருக்க இந்த முக கவசம் உதவும். வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகளை அதிகம் பயன்படுத்துங்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.