வேகமெடுக்கும் கொரோனா.! ஹரியானாவில் முகக்கவசம் கட்டாயம் – அரசு அதிரடி
ஹரியானாவின் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கபட்டுள்ளது.
கொரோனா வேகமெடுத்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது என்று ஹரியானா சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஹரியானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டதை தொடர்ந்து, அம்மாநில சுகாதாரத் துறை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
100க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹரியானாவில் கடந்த வெள்ளிக்கிழமை 407 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், குருகிராமில் அதிகபட்சமாக 206 பேருக்கு கொரோனா என கூறப்படுகிறது