டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயம்.
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது. அங்கு கொரோனா அதிகரித்து வரும் மத்தியில், இந்த அறிவிப்பை டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) அறிவித்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 632க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், நேர்மறை விகிதம் 4.42%-ஐ எட்டியுள்ளது.
தொற்று பரவுவதை தொடர்ந்து கண்காணிக்குமாறு டெல்லி அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்லியிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…