முகக்கவசம் கட்டாயம்..மீறுவோருக்கு ரூ.500 அபராதம் – மாநில அரசு அறிவிப்பு!

Default Image

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயம்.

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது. அங்கு கொரோனா அதிகரித்து வரும் மத்தியில், இந்த அறிவிப்பை டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) அறிவித்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 632க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், நேர்மறை விகிதம் 4.42%-ஐ எட்டியுள்ளது.

தொற்று பரவுவதை தொடர்ந்து கண்காணிக்குமாறு டெல்லி அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்லியிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review