2.3 அடி உயரமுள்ள மனிதனுக்கு திருமணம்..! பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு அழைப்பு..!
நீண்ட நாள் தேடலுக்கு பின், 2.3 அடி உயரம்கொண்ட அசீம் மன்சூரிக்கு வரும் 7-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
உத்தரப்பிரதேச ஷாமிளி மாவட்டத்தில் உள்ள கைரான பகுதியில் வசித்து வருபவர் அசீம் மன்சூரி. இவருக்கு வயது 27. இவர் 2.3 அடி உயரம் மட்டுமே உள்ளார். இவர் தனது சிறு வயது முதலே கேலி கிண்டலுக்கு ஆளான நிலையில், 5-ஆம் வகுப்புடன் தனது படிப்பை முடித்துக் கொண்டார்.
அதனை தொடர்ந்து அவர், தனது சகோதரர்கள் நடத்திய அழகு நிறுவன கடையில் பணிபுரிந்தார். பின் தானே தனியாக கடை நடத்தி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கு நீண்ட நாட்களாக தனக்கு ஏற்ற துணை கிடைக்கவில்லை என்ற கவலையில் இருந்துள்ளார். மேலும், தான் திருமணம் செய்துகொள்ள பெண் பார்க்குமாறும் பலரிடம் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், நீண்ட கால தேடலுக்கு பின், தனது வாழ்க்கை துணையை கண்டடைந்த அஸீமுக்கு வரும் 7-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.