இரண்டு ஆண்களுக்கும் திருமணம்.! வைரலாகும் கேரள ஓரினசேர்க்கையாளர்கள் புகைப்படம்.!
- இரு பெண்ணும், இரு ஆண்ணும் காதலித்து ஒன்றாக திருமணம் செய்துகொள்வது தற்போது வழக்கமானது.
- தற்போது இந்த ஓரின சேர்க்கை திருமணம் கேரளாவில் நடந்திருக்கிறது.
ஒரே பாலினத்தை சேர்ந்த இரு பெண்ணும், இரு ஆண்ணும் காதலித்து ஒன்றாக திருமணம் செய்துகொள்வது வெளிநாடுகளில் அவ்வப்போது நடந்து வந்தது. இது தற்போது இந்திய அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் ஓரின சேர்க்கை திருமணம் வடமாநிலங்களில் ஒரு சில இடங்களில் நடைபெற்றது. தற்போது இந்த ஓரின சேர்க்கை திருமணம் கேரளாவில் நடந்திருக்கிறது.
இந்நிலையில், உலகம் முழுக்க ஓரினச் சேர்க்கை உறவுமுறை குறித்து விழிப்புணரவு ஏற்பட்டு வரும் சூழலில் கேரளாவில் ஓரின சேர்க்கையாளர்களான ஆண்டனி சூலிக்கல், அப்துல் ரெஹிம் ஆகிய இரண்டு ஆண்களின் திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பேசிய அவர்கள், இது மிக சாதாரணமானது, சாத்தியமானது என தெரிவித்துள்ளனர்.