37,000 பெண்களுக்கு தலா ரூ.20,000 திருமண உதவித்தொகை – உ.பி அமைச்சர் அறிவிப்பு
உத்தரப் பிரதேசத்தில் 37,000 ஓபிசி பெண்களுக்கு திருமண உதவி தொகையை அறிவித்தார் அம்மாநில அமைச்சர்.
உத்தரப் பிரதேசத்தில் மாநிலம் முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவைச் சேர்ந்த 37,500 பெண்களுக்கு, அவர்களின் திருமணத்தின் போது தலா ரூ.20,000 திருமண உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நரேந்திர காஷ்யப் அறிவித்துள்ளார்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்தத் தொகை திருமணத்திற்கு 90 நாட்களுக்கு முன்பும் பின்பும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.