நாளை முதல் வாரச்சந்தைகள் திறக்க அனுமதி – டெல்லி முதல்வர் அறிவிப்பு!!

Default Image

டெல்லியில் நாளை முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.

டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை முன்னிட்டு, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மக்களின் வசதிக்காகவும், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் சந்தைகளை திறக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஒரு மண்டலத்திற்கு ஒரு வாரச் சந்தையில் அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

சாலையோரங்களில் வாரச்சந்தை செயல்பட அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளனர். டெல்லியில் நேற்று 72 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 14,36,695 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 25,066 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 14,11,064 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்