வெட்கமா இல்லை…உன்ன மாதிரி ஒருத்தன பார்த்ததில்லை..இழிவான நீதிபதி நீ.!பாலியல் வக்கிரம் பிடித்தவன்-மார்க்கண்டே சரமாரி தாக்கு

Default Image

ரஞ்சன் கோகாயைப் போன்ற வெட்கமற்ற நீதிபதியை நான் பார்த்ததில்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடுமையாக விமர்சித்து உள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமைய நீதிபதியாக பதிவி வகித்து அண்மையில் ஓய்வுப்பெற்ற  நிலையில் ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார் .

தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.இதை அடுத்து அவரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டுள்ளார். மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து காலியான அந்த இடத்திற்கு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சன் கோகாயின் இந்த நியமனத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டங்களும் ,விமர்சனங்களும் பரந்த நிலையில் இதற்கு காரணம் அவர் அயோத்தி பிரச்சனை, ரஃபேல் ஒப்பந்த முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரின் நியமனம் தொடர்பாக கடுமையாக விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் நான் 20 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 20 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறேன். என் நீண்ட அனுபவத்தில், ரஞ்சன் கோகாய் போன்ற கொஞ்சமும் வெட்கமற்ற, ஒரு இழிவான நீதிபதியை தான் பார்த்ததில்லை. பாலியல் வக்கிரம் நிறைந்த இவரிடம் இல்லாத தீய குணங்கள் என எதுவுமில்லை” என தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்