மராத்தா இட ஒதுக்கீடு… உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட மனோஜ்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு அம்மாநிலத்தில் மராத்தா மக்கள் நீண்ட வருடமாக போராடி வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து கடந்த 2018-ல் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கான 16% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
ஆனாலும், இந்த 16 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் பிறகு அந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்து இருந்தது. இது மராத்தா சமூக மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியது. அடுத்ததாக பல்வேறு முறை அரசுக்கு கோரிக்கை வைத்தும், இடஒதுக்கீடு அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதனை தொடர்ந்து மராத்தா சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜாரங்கே குன்பி இனத்தினருக்கு வழங்கும் சான்றிதழ் வழங்க வேண்டும். இலவசக் கல்வி வழங்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திய கடந்த 20-ம் தேதி மனோஜ் ஜல்னாவில் இருந்து மும்பைக்கு ஆயிரக்கணக்கான மராத்தா இன மக்களுடன் பேரணியாக நடந்து வந்தார்.
மக்களவை தேர்தல் – வாக்களிக்க தகுதியானவர்கள் எத்தனை கோடி பேர்?
நேற்று போராட்டக்குழுவினர் நவிமும்பையை வந்தடைந்தனர். இரவில் வாஷி ஏ.பி.எம்.சி.மார்க்கெட்டில் தங்கி இருந்தனர். இதையடுத்து நேற்றிரவு 2 அமைச்சர்கள் மனோஜ் ஜராங்கே உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை போது மகாராஷ்டிர அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், அனைத்து கோரிக்கைகளையும் மாநில அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, ஏராளமான ஆதரவாளர்களுக்கு மத்தியில், சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
இதுகுறித்து மனோஜ் ஜராங்கே கூறுகையில், “அனைத்து கோரிக்கைகளையும் மாநில அரசு ஏற்றுக்கொண்டது, 54 லட்சம் மராத்தா மக்களுக்கு கும்பி என்ற சாதிச்சான்றிதழ் விரைவில் வழங்கப்படும். போலீசார் மராத்தா இனமக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற சம்மதித்து உள்ளனர்” என தெரிவித்தார்.
தங்களது கோரி கோரிக்கை ஏற்கப்படும் வரை மும்பையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக மனோஜ் ஜராங்கே ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.