ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர் !!!!
- முதற்கட்ட விசாரணையில் வெடித்தது கிரெனேட் வகை வெடிகுண்டு என தெரிய வந்துள்ளது.
- கடந்த ஆண்டு மே மாதம் முதல் பேருந்து நிலையத்தில் கிரெனேட் வெடி குண்டு தாக்குதல் மூன்று முறை நடத்தி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் உள்ள எஸ்ஆர்டிசி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டியிருந்த பேருந்து திடீர்ரென வெடித்து சிதறியது.
இந்த குண்டு வெடிப்பில் பலர் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் வெடித்தது கிரெனேட் வகை வெடிகுண்டு என தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்தை சுற்றி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.ராணுவம் மற்றும் போலீஸ் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் பேருந்து நிலையத்தில் கிரெனேட் வகை வெடி குண்டு தாக்குதல் மூன்று முறை நடத்தி உள்ளனர்.
கடந்த மாதம் 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.