#BREAKING : கொரோனாவால் நம்மில் பலர் அன்பிற்குரியவர்களை இழந்திருக்கிறோம் – பிரதமர் மோடி
- நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை.
- கொரோனா பாதிப்பால் நம்மில் பலர் அன்புக்குரியவர்களை இழந்து விட்டோம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அதன்படி, தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த உரையில், உலகிலுள்ள மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய நோய் தொற்று உலக மக்களை பாதித்து வருகிறது.
இந்த கொரோனா பாதிப்பால், இந்தியா பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் நம்மில் பலர் அன்புக்குரியவர்களை இழந்து விட்டோம். இந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்றால் நாம் பல படங்களை கற்றுள்ளோம்.