அதிகாரத்தில் இருப்பவர்களின் இரக்கமற்ற செயலால் விவசாயிகள் பலர் உயிரிழக்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா அவர்கள் கூறியுள்ளார்.
மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் நாடு தழுவிய போராட்டத்தின் ஒருபகுதியாக தற்பொழுது காங்கிரஸில் உள்ள தொழிலாளர்களும் காங்கிரஸ் தலைவர்களும் பலர் பஞ்சாப் ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேச தலைவர்களுடன் இணைந்து அணிவகுப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட பல காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் காங்கிரஸ் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடாவும் ஒருவர். காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பின்பு செய்தியாளர்களிடம் பூபேந்தர் சிங் ஹூடா அவர்கள் பேசியுள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், சட்டசபையில் தாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர விரும்புவதாகவும், எந்த கட்சி விவசாயிகள் பக்கம் இருக்கிறது என்பதை விவசாயிகள் அறிவார்கள் எனவும் அரசாங்கம் இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகளின் தியாகத்தையும் புறக்கணிப்பது மட்டுமல்லாமல் அவமதிக்கவும் செய்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், இது கடுமையான குற்றம். அதிகாரத்தில் இருப்பவர்களின் இரக்கமற்ற செயலால் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும் தற்போதும் தங்களையும் அரசாங்கத்தால் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…