அரை நூற்றாண்டிற்கு பிறகு ஜம்முவில் சீரமைக்கப்படும் மன்சார்..கையில் எடுத்தது மத்திய சுற்றுலாத்துறை
70 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்முவில் மன்சார் ஏரி சீரமைக்கப்பட்டு 20 லட்ச சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்முவில் உள்ள மன்சார் ஏரி வளர்ச்சித் திட்டத்தை, மத்திய வடகிழக்கு பிராந்தியங்களுக்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய.ஜிதேந்திர சிங் மன்சார் பகுதி மக்களுக்கு இன்றைய நாள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். 70 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் மன்சார் ஏரி வளர்ச்சித்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் இங்கு பல தேசிய திட்டங்களை செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.இந்த திட்டம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மன்சார் புதுப்பொழிவு பெறப்போகிறது.
ரூ.200 கோடி ஓதுக்கப்பட்டு ன்சார் ஏரி மற்றும் தேவிகா ஆறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்திய பின்னர் மன்சார் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வருடத்திற்கு 20 லட்சமாக அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் மன்சார் ஏரி புதுப்பிப்பு திட்டத்தால் 1.15 கோடி பேருக்கு
வேலைவாய்ப்பு கிடைக்கும் ஆண்டுக்கு ரூ.800 கோடிக்கும் அதிகமான வருவாய் இதன் மூலமாக கிடைக்கும்.என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.