மனோஜ் சின்ஹா ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றார்!

மனோஜ் சின்ஹா ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றார்.
ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநரான முர்மு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் என்ன காரணத்திற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று உறுதியான தகவல் வெளியகாத நிலையில், இவருக்கு மத்திய அரசு சார்பில் வேறு ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்றுக் கொண்டார். இவர் 2014 – 2019-ல் பாஜகவில் மத்திய அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதற்கு முன்பு துணைநிலை ஆளுநராக இருந்த கிரிஷ் சந்திர முர்மு தற்போது இந்தியாவின் புதிய கம்ப்ரோலர் & ஆடிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025