முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட மனோகர் பாரிக்கரின் உடல்!!
- மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது.
- சிகிச்சை பலமின்றி நேற்று அவர் காலமானார். அவருக்கு வயது 63.
கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் வெளிநாட்டிலும், டெல்லி எய்ம்ஸிலும் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி சட்டப்பேரவைக்கு வந்தார். பின்னர் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வந்த அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலமின்றி நேற்று அவர் காலமானார்.
Hon'ble Prime Minister Shri @narendramodi pays his respects to Shri Manohar Parrikar. pic.twitter.com/haPfCUkF68
— BJP Goa (@BJP4Goa) March 18, 2019
பாரிக்கரின் உடல் இன்று காலை பனாஜி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கலா அகாடமிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
Mortal remains of Shri Manohar Parrikar being kept at BJP office in Panaji today morning. pic.twitter.com/XqTZz1aU7i
— BJP Goa (@BJP4Goa) March 18, 2019