மன் கி பாத் நிகழ்ச்சியில்.. தமிழக பெண்மணிக்கு பாராட்டு.. பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

Default Image

மலைவாழ் மக்களுக்காக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை செய்து வரும் தமிழக பெண்மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி பாராட்டு.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். அதன்படி, இன்று 79ஆவது மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, டோக்கியோ ஒலிம்பிக்கில் மூவர்ண கொடியை ஏந்தி இந்திய வீரர்கள் வலம் வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது. ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகளை சமூக ஊடகங்கள் மூலம் ஊக்குவியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கார்கில் வெற்றி தினமான நாளை இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதையை செலுத்தவும் வலியுறுத்தினார். பின்னர் 2011ம் ஆண்டுக்கு பிறகு காதியில் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்பின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தது வரும் சாமானிய மக்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, நீலகிரி மாவட்டம் குன்னுரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கிய ராதிகா சாஸ்திரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மலைவாழ் மக்களுக்காக ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை செய்து வருவதாக ராதிகாவை பாராட்டினார். பணியில் இருந்துகொண்டே சமூக சேவையிலும் ஈடுபடலாம் என்பதற்கு ராதிகா சாஸ்திரி ஒரு உதாரணம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் ஐஐடியில் 3டி பிரின்டிங் தொழில் நுட்பத்தில் வீடு கட்டுமானம் செய்த மாணவர்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்