தவறாதீர்கள்..என்று ட்விட்டரில் பிரதமர் மோடி அழைப்பு

பிரதமர் மோடியின் 62வது வானொலி உரைத் தொடரான மன் கீ பாத் இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது இதனைக் காண தவறாதீர்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே கலந்துரையாடும் மனதில் குரல் என்ற மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது உரையானது இன்று நடைபெறுகிறது. இதற்கு முன் சென்ற மாதம் ஜன.,26 குடியரசு தினத்தை ஒட்டி மாலையில் மன் கீ பாத் ஒலிபரப்பானது.
Do tune in tomorrow. #MannKiBaat pic.twitter.com/4ouloyphIs
— Narendra Modi (@narendramodi) February 22, 2020
இந்த ஒலிபரப்பில் ஜனநாயக அமைப்பில் வன்முறைக்கு இடமில்லை பத்ம விருதுகள் மக்கள் விருதுகளாக மாறியுள்ளன என்று தனது முந்தைய மன் கீ பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட பிரதமர் இன்று ஒலிபரப்பாகும் “மனதின் குரல்” ஒலிபரப்பை கேட்கத் தவறாதீர்கள் என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.