போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மன்மோகன் சிங்
ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து போட்டியிட்டார் .இதற்காக ஆகஸ்ட் 13-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார் மன்மோகன் சிங்.இந்த நிலையில் ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மன்மோகன் சிங்.