மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

2004 முதல் 2014 வரை இந்திய பிரதமராக மன்மோகன்சிங் பொறுப்பில் இருந்த போது 100 நாள் வேலை திட்டம் முதல் கல்வி உரிமை சட்டம் வரை பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

Former PM Manmohan singh

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கட்சி பேதமின்றி பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரையில் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்திய முன்னாள் பிரதமர் மறைவுக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

மன்மோகன் சிங் 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகள் 2 முறை இந்திய பிரதமராக பொறுப்பில் இருந்துள்ளார். அவர் ஆட்சி காலத்தில் இந்திய மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். குறிப்பாக கிராமப்புற மக்கள் வாழ்கை மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்.

2004 முதல் 2014 வரை இந்திய பிரதமராக மன்மோகன்சிங் பொறுப்பில் இருந்த போது நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட குறிபிட்ட சில முக்கிய திட்டங்கள் குறித்து காணலாம்…

  • கிராமப்புற மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் உறுதியாக வேலை வழங்கு விதமாக தற்போது வரை செயல்பாட்டில் இருக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (MGNREGA) 2005இல் அறிமுகம் செய்யப்பட்டது.
  • கிராமப்புற மக்களுக்கு நல்ல மருத்துவ சேவைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் (NRHM) 2005இல் அறிமுகம் செய்யப்பட்டது.
  • பொதுத்துறை அமைப்புகளில் வெளிப்படையாக தகவல்களை அனைத்து குடிமக்களும் அறியும் வண்ணம் தகவல் அறியும் உரிமைசட்டம்  தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) 2005இல் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.
  • நகர மண்டலங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் ஆட்சி சீர்திருத்தங்களை மேம்படுத்தும் விதமாக ஜவஹர்லால் நேரு தேசிய நகர அபிவிருத்தி திட்டம் 2005 முதல் 2012 வரை செயல்படுத்தப்பட்டது.
  • கிராமப்புறங்களில் உள்ள குடிமக்களுக்கு குடிநீர், வீடுகள், சாலை வசதிகள், மின்சாரம் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக ராஷ்டிரிய சுவஸ்த்ய பீமா யோஜனா (RSBY)  திட்டம் 2008இல் அறிமுகம் செய்யப்பட்டது.
  • வறுமைக்கோட்டிற்கு கிழே உள்ள குடும்பங்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கும் நோக்கத்தில் ராஷ்டிரிய சுவஸ்த்ய பீமா யோஜனா திட்டம் 2008இல் அறிமுகம் செய்யப்பட்டது.
  • தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் (NFSA) 2013இல் துவங்கப்பட்டது.
  • 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வியை உறுதி செய்தல்.
    கல்விக்கான உரிமை சட்டம் (RTE) 2009இல் அறிமுகம் செய்யப்பட்டது.
  • அரசின் நலத்திட்ட நிதியுதவிகள் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வழங்கும் DBT திட்டம் 2013 முதல் அமலில் உள்ளது.
  • ஒவ்வொருவருக்கும் தனித்துவ அடையாள எண் கொண்ட அதார் திட்டம் (UIDAI) 2009 மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2016இல் பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் நடைமுறைக்கு வந்தது.
  • குடிசை மாற்று வாரியமான  ராஜீவ் அவாஸ் யோஜனா (RAY) திட்டம் 2009இல் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இளைஞர்களின் தொழில்திறனை மேம்படுத்தும் விதமாக தேசிய திறன் மேம்பாட்டு திட்டம் 2009இல் துவங்கப்பட்டது.
  • பழங்குடியின மக்கள் காடு மற்றும் அதன் வளங்களின் மீதான உரிமையை பாதுகாக்கும் வண்ணம் காடுகள் உரிமை சட்டம் (FRA) 2006இல் அறிமுகம் செய்யப்பட்டது.
  • குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) அறிமுகம் செய்யப்பட்டது.
  • விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் 2008 முதல் தொடங்கப்பட்டது.
  • தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் தேசிய முதலீட்டு மற்றும் உற்பத்தி மண்டலங்கள் (NIMZ) 2011 முதல் உருவாக்கப்பட்டது.
  • கிராமப்புறங்களில் சுயதொழில் மற்றும் திறன்மேம்பாடு தொடர்பாக தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) 2011இல் தொடங்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு திட்டங்கள் 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Pahalgam terror attack
mayonnaise
Rajnath Singh terrorist attack
pat cummins about srh
PahalgamTerroristAttack pm modi
SRH vs MI - IPL 2025