ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர் போன்றவர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி மாநிலங்கள் முடிவு செய்ய அனுமதிக்கலாம் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த யோசனைகள் கூறி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையை விரிவுபடுத்த மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் யோசனை வழங்கியுள்ளார். அடுத்த ஆறு மாதங்களுக்கு எவ்வளவு தடுப்புசி கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது..? மாநிலங்களுக்கு எந்ததெந்த முறையில் தடுப்பூசி மருந்தை மத்திய அரசு வினியோகம் செய்ய உள்ளது..? என கேள்வி எழுப்பினார்.
எத்தனை பேருக்கு தடுப்பூசி போடுவது என்பதை விட எத்தனை சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்பது முக்கியம். மாநிலங்களுக்கு தடுப்பூசி மருந்து அனுப்பியது போக மத்திய அரசிடம் அவசிய தேவைகள் 10% மருந்து இருக்க வேண்டும். 45 வயதுக்கு உட்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி முடிவெடுக்க மாநிலங்களுக்கு அனுமதி தேவை. ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர் போன்றவர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி மாநிலங்கள் முடிவு செய்ய அனுமதிக்கலாம்.
தடுப்புசி உற்பத்தி திறனை நிறுவனங்கள் அதிகரிக்கத் தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்க வேண்டும். மேலும் பல நிறுவனங்கள் கொரனோ தடுப்பூசி தயாரிக்க உரிமம் வழங்க வேண்டிய நேரம் இது. ஏற்கனவே இஸ்ரேலில் கொரனோ தடுப்பூசி பல நிறுவனங்கள் தயாரிக்கும் வகையில் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நம்பகமான அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு தடுப்பு இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.
உள்நாட்டு உற்பத்திக்கு மேலதிகமாகத் தேவைப்படும் கொரனோ தடுப்பூசி மருந்தை இறக்குமதி செய்யலாம். ஐரோப்பிய மருத்துவ முகாமை அமெரிக்க மருந்துகள் ஆணையம் போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…