துவங்கியது இறுதி ஊர்வலம்… யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங் உடல் தகனம்.!
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொடங்கிய இறுதி ஊர்வலம் யமுனை ஆற்றின் கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதியை சென்றடைய உள்ளது.
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது வீட்டில் இருந்து தொடங்கிய ஊர்வலம், அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலம் வழியாக நிகாம்போத் காட் பகுதிக்கு செல்கிறது
முன்னதாக, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல், இறுதி மரியாதைக்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் (AICC) வைக்கப்பட்டபோது, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, மன்மோகன் சிங் உடல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து நிகம்போத் காட் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர்கள் ரேவந்த் ரெட்டி, சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொடங்கிய இந்த இறுதி ஊர்வலம் யமுனை ஆற்றின் கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதியை சென்றடைய உள்ளது. இன்னும் சற்று நேரத்தில், நிகம்போத் காட் பகுதியில் மன்மோகன் சிங் உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு, 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.