நாளை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார் மன்மோகன் சிங்
நாளை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.இதற்காக வருகின்ற 13-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யுவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து தேர்வாகஉள்ளார்.