Manmohan Singh: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 33 ஆண்டுகள் பதவி வகித்து ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 54 பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 49 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், 5 எம்பிக்களின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
அதிலும் குறிப்பாக 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 1991 முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
பொருளாதாரத்தில் பல துணிச்சலான சீர்திருத்தங்களை ஏற்படுத்தியதற்காக அறியப்பட்ட மன்மோகன் சிங், 1991 அக்டோபரில் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார். நரசிம்மராவ் அரசாங்கத்தின் கீழ் மன்மோகன் சிங் 1991 முதல் 1996 வரை நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 வரை பிரதமராகவும் இருந்தார்.
இந்த நிலையில், 91 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த பிறகு, காலியாக இருக்கும் இடத்தை நிரப்ப காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார். எனவே, 33 ஆண்டுகால பயணத்தை முடிக்கும் மன்மோகன் சிங்குக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…