அனைவருக்கும் வழிகாட்டியாக மன்மோகன் சிங் திகழ்கிறார்.! பிரதமர் மோடி புகழாரம்.!
இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்காக கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது நாளை வரையில் நடைபெற உள்ளது. இன்று 7வது நாளாக மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வழக்கமான விவாத நிகழ்வுகளுக்கு கூட்டத்தொடர் காலை 11 மணியளவில் தொடங்கியது.
டெல்லியில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!
இன்றைய கூட்டத்தொடரில், பதவி காலம் நிறைவடையும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தாக்கல் செய்தார். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடிஉரையாற்றினார்
அப்போது அவர் பேசுகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங் பற்றி பேசினார். அவர் கூறுகையில், மன்மோகன் சிங் அனைவருக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகம் அளிக்க கூடியராகவும் இருந்துள்ளார். நமது நாட்டின் ஜனநாயகம் பற்றி பேசும் போதெல்லாம், மன்மோகன் சிங்கின் பங்களிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கருப்பு உடை அணிந்து எதோ பேஷன் ஷோவில் பங்கேற்றது போல வந்துள்ளனர். கருப்பு உடை என்பது செழிப்படையும் இந்தியாவிற்கு திருஷ்டி போட்டு போல அமைந்துள்ளளது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கிண்டல் செய்தார் பிரதமர் மோடி.
இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்னரே திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கு உரிய அளவிலான பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என்று போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.