முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.
தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து தேர்வாக உள்ளார்.
இதனையடுத்து இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் மன்மோகன் சிங்.வேட்புமனு தாக்களில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…
ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…
வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில்…
சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த…
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற…